Thursday, December 2, 2010

உத்தமனாகிய நான்


உத்தமனாகிய நான் !
-------------------------------------

சில  நேரங்களில்  சில  மனிதர்கள் 

சிற்சில  எண்ணங்களுடன்
 பற்பல  முறைகளில்  கதைக்கையில்,
 கதை  என்ற  ஒன்றும்  நிஜமாகிப்போகுதடா !
அதிலே  பல  உண்மைகளும்  செத்து  வீழ்குதடா !
இதுவென்று அதுவென்று யான் சொல்லல் ஆகுமோ !
இதன்று அது என்று சொல்லிவிட்டால் வாழுமோ !
கனவென்ற ஒன்று காற்றில் மிதக்காவிட்டலும்,
கண்ணீரில் மிதக்காதோ ?
அதை துடைக்கும் கரங்கள் எனை வந்து சேராதோ ?


- அரவிந்த் நாராயணன்


Friday, October 1, 2010

முற்றுபுள்ளி



எண்ணிய எழுத்துக்களை கவிதையாக

வரைந்தேன், கண்களுக்கு அது ஓவியமானது..

படித்தேன், காதுகளுக்கு அது இசையானது..

உணர்ந்தேன், எண்ணங்களுக்கு ஒரு உணருதல் கிடைத்தது..

பாடினேன், மெய் சிலிர்த்தது..

இவை அனைத்தையும் அவளிடமிருந்து கண்ட நான்..

உருகிப்போய் எனது எழுத்துகளின் ஓரத்தில் நின்றேன் 

முற்றுபுள்ளியாய் !
- அரவிந்த் நாராயணன்


Friday, July 30, 2010

கரைச்சல்


காகம் கரைகையில்
கரைந்து போய்
வாசலைப் பார்த்தேன் 
என் கண்கள் 
தான் கரைந்தன 
கதவுகள் கரையவில்லை !

- அரவிந்த் நாராயணன்