Sunday, January 31, 2010

ஏமாற்றம்



தோன்றும் கற்களெல்லாம் சிலையாவதில்லை

மலரும் மலர்களெல்லாம் மனம் வீசுவதில்லை 

வீசும் காற்றெல்லாம் தென்றலாவதுமில்லை

மின்னும் பொருளெல்லாம் இரத்தினமாவதுமில்லை 

நண்பா !     பிறகு நீ மட்டும் ஏன் 

பார்க்கும் பெண்கள் அனைவரும் 

அவளைப் போல் ஏமாற்றுபவர்கள் 

என்றே நினைக்கிறாய் ?


- அரவிந்த்


Saturday, January 30, 2010

இன்றைய சமுதாயம்

 

 

நெசவும் சேலைகள் எல்லாம் பெண்களுக்கில்லை 
பாசம் காட்டுபவர் எல்லாம் தாயுமில்லை 
பிறக்கும் மனிதர் எல்லாம் நல்லவராவதுமில்லை 
படித்த மாணவருக்கு எல்லாம் வேலை கிடைதுவிடுவதுமில்லை 

- அரவிந்த்


சொந்தங்கள்



எமன் வந்தான் என் தந்தையை தேடி

என் சொத்துக்களை பிடுங்க வந்தன சொந்தங்கள் ஓடி

ஊரெங்கும் சுற்றினேன் ஒரு வேலையை தேடி

கிடைக்காமல் செய்து விட்டது காலக்கண்ணாடி

இலாட்டரியில் எனக்கு விழுந்ததோ ஒரு கோடி

சொந்தங்கள் வந்தன என் கால்களை தேடி !!!

- அரவிந்த் 


அம்மா




உன்னை மலர் என்று கூறவா ?
     வேண்டாம் அது வண்டுகளுக்கே சொந்தம் 

உன்னை தென்றல் என்று கூறவா ?
     வேண்டாம் அது எல்லோருக்கும் சொந்தம் 

உன்னை வண்ணநிலவு என்று கூறவா ?
     வேண்டாம் அது நீலவானுக்கே சொந்தம் 

உன்னை அலைகள் என்றுதான் கூறவா ?
     வேண்டாம் அது கடலுக்கே சொந்தம் 

உன்னை என் உயிர் என்றுதான் கூறுவேன் 
     ஏனெனில் அது எனக்கு மட்டுமே சொந்தம் !!!

- அரவிந்த்