Wednesday, February 17, 2010

சின்னம்

 

காதல் எங்குள்ளது என்று கேட்டால் ?

இதயம் என்கிறான் !

அந்த இதயத்தையே அம்பெய்தி கொன்றுவிட்டு 

பின்பு காதலை இவன் எங்கிருந்து 

உணரப் போகிறான் ! 

- அரவிந்த்


Tuesday, February 16, 2010

காதலர் தினம்


காதலர் தினம் என்றால் அன்று மட்டும் தான் காதலிப்பீர்களா ?
அல்ல
அன்று மட்டும் தான் அன்பு பாராட்டுவீர்களா ?

என்று கேட்பதோ / சொல்வதோ அறியாமை.

நாம் என்ன பொங்கல் அன்று மட்டும் தான் பொங்கல் சாப்பிடுகிறோமா ?
அல்ல 
தீபாவளி அன்று மட்டும் தான் விளக்கேற்றுகிறோமா ?

அவ்வளவு ஏன் ... 
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதாக 'கூறப்படும்' 
அந்த கடவுளுக்கே !
பொதுவாக சிறப்பிப்பதர்க்கு கோவில்கள் தேவைப்படுமாயின் 
அந்த கடவுளுக்கே !
உருவமும், பெயரும் கொடுத்த 
இந்த மனிதர்களின் உயரிய உன்னத உணர்ச்சியான "காதலுக்கு" !

ஏன் சிறப்பிக்க ஒரு நாள் இருக்கக்கூடாது ?
- அரவிந்த்


அழகு

 

ஆணுக்கு அழகு வீரம் என்றார்கள் 

பெண்ணுக்கு அழகு நாணம் என்றார்கள் 

மதிக்கு அழகு வெண்மை என்றார்கள் 

அன்னத்திற்கு அழகு நடை என்றார்கள் 

ஆதவனுக்கு அழகு ஒளி என்றார்கள் 

உறவினுள் அழகு தாய்மை என்றார்கள் 

இந்த காதலுக்கு அழகு தான் என்ன ?

                . . . . . . . தெய்வீகம் தானோ !

- அரவிந்த்


Sunday, February 14, 2010

விழியின் வழியாக


உன் மிசைல் பார்வையில் 

என் இதயம் அணுகுண்டைப் 

போல் வெடித்துச்சிதறுகிறது 

மீண்டுமா ஒரு வெடிப்புன்னகை ?

ஏவுகனையாகிவிட்ட என் மனம் 

உன்னையே சுற்றுகிறது 

செயர்க்கைக்கொளாக . . . 
- அரவிந்த்


Saturday, February 13, 2010

கலியுகக் காதல்

 

உன் காதலுக்கு

நிலவைத் தூது விடுகிறாயே 

உன் காதல் 

என்ன நிலவைப் போல் 

வெண்மையானதா ? அல்ல தூது விட 

உன் காதல் 

என்ன தெய்வீகமானதா ?


- அரவிந்த்


Wednesday, February 10, 2010

பிரிவு

 

உன் காதலியின் பிரிவைத் 

தாங்க முடியாமல் தானா ?

உன் முகத்தை மேகத்தினுள் 

மறைத்துக் கொள்கிறாய் ?

- அரவிந்த்


Tuesday, February 9, 2010

தேய்பிறை

 

இக்கலியுகத்தில் 

தெய்வீகக்காதலைக்

காண முடியாததை 

எண்ணியா ? நீ 

நாளும் 

தேய்ந்து கொண்டிருக்கிறாய் ?

- அரவிந்த்


நிலா

 

சிற்பி சிலைகளை செதுக்குகிறான் 

அவனுக்கு சன்மானம் கிடைக்கிறது 

ஓவியன் ஓவியத்தை தீட்டுகிறான் 

அவனுக்கு புகழ்மாலை கிடைக்கிறது 

கவிஞன் கவிதைகளை படைக்கிறான் 

அவனுக்கோ பொற்காசுகள் கிடைக்கிறது 

நீ ... காதலுக்கு தூது போகிறாயே 

உனக்கு கிடைத்தது என்ன ?

                                                                      வெறும் தேய்மானம் தானோ ? . . .

- அரவிந்த்


Sunday, February 7, 2010

நட்பு எனப்படுவது யாதெனில் ?

 

முகங்கள் 'தேவையில்லை'

  மனங்களே போதும் 

வயது ஒரு 'பொருட்டில்லை'

புரிதலே போதும் 

அந்தஸ்து 'அவசியமில்லை'

பாகுபாடற்ற உள்ளமே போதும் 

பாலின வித்தியாசம் ஒரு 'தடையில்லை'

கரையற்ற எண்ணங்களே போதும் 

இன்பத்தில் நட்புக்கு ஏதும் 'நிகரில்லை'

துன்பத்தில் அதன் பிரிவைப்போல் 'ஏதொன்றுமில்லை' !

- அரவிந்த்


Saturday, February 6, 2010

தாய்


 

 குப்பையிலும் மாணிக்கம் உண்டு 

என்ற போது நான் நம்பவில்லை !

ஆனால் உன் மூலம் அறிந்து கொண்டேன் 

பெண்களிலும் தெய்வம் உண்டு என்று !

- அரவிந்த்


Friday, February 5, 2010

பெண்


 

சிற்பி செதுக்கிய 
                                             ஓர் அழகிய சிற்பம் !

ஓவியன் வரைந்த 
                                                 ஓர்  அற்புத ஓவியம் !

கவிஞன் எழுதிய 
                                                      ஓர் இலக்கிய காவியம் !

இயற்கை உருவாக்கிய 
                                                     ஓர் உன்னத பாலினம் !

- அரவிந்த்


பெண்ணிடம்


 

அன்பின் உறைவிடம் !

கற்பின் போக்கிடம் !

பாசத்தின் முடிவிடம் !

நாணத்தின் புகலிடம் !
- அரவிந்த்


தீபம்


 

சொர்கத்துக்கு வழிகாட்டும் 

ஒரு தங்க வழிகாட்டி 

இருள்களை விளக்கிவிடும் 

திருட நினைத்தால் சுட்டுவிடும் !

- அரவிந்த்


Thursday, February 4, 2010

பனித்துளி


 

ஊரெல்லாம் விழுந்து கிடக்கும் 

"இரத்தினக் கற்கள்"

கையினில் அல்லவியலாது 

விழிகளில் ரசிக்கத்தான் முடியும் 

அணிகலனாக உடுத்தவியலாது 

சீண்டியதும் கரைந்தோடும் !

- அரவிந்த்
-------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு : நடுங்கிக்கொண்டிருந்த அந்த இருவில், எனது புதிய கேமெராவில் நான் எடுத்த புகைப்படம் அது !


புள்ளி மான்


 

துள்ளி ஓடும் புள்ளி மானே 

வேடன் வில்லில் நீ சிக்கியது ஏனோ ?

துள்ளும் தருணத்தில் கால் தடுக்கியதோ 

ஐயோ ! பாவம் உன் உயிர் பிரிந்தனவோ !

- அரவிந்த்


Wednesday, February 3, 2010

கதிரவக் காதல்வைகறையில்,                                                             

உறங்கும் காதலியை தன் ஒளிக் 

கரங்களால் சீண்டினான் காதலன் 

விரிந்து மலர்ந்து இவளும் புன்னகைத்தால் 

நாள் முழுவதும் இன்பமே இவர்களுக்கு 

தூது போனது !                                                 


மாலையில்,                                                                   

தங்கள் பிரிவைத் தாங்க முடியாது 

அழுததின் விளைவு அவள் வாடினால் 

இவன் முகம் சிவந்தது, வாடிய அவள் 

உதிர்வதைக் கண்டு தானும் மறைந்தான் 

இருளும் சூழ்ந்தது !                                            
- அரவிந்த்


Tuesday, February 2, 2010

மழைத்துளி


 

மேகம் கொடுக்கும் 

வெள்ளிப் பஸ்பம் 

வீதியில் விழுந்தால் 

தங்கப் பஸ்பம் !

- அரவிந்த்


Monday, February 1, 2010

துன்பமே தொலைந்து போ


ஏ துன்பமே !                                              

புயலாக வந்து மீனவர்களை வருத்துகிறாய் 

மழையாக வந்து ஏழைகளை அழவைக்கிறாய் 

வறுமையாக வந்து பாமரனை கலைக்கிறாய் 

நோயாக வந்து செல்வந்தனையும் கெடுக்கிறாய் 

இன்னும் நீ யாரை எதிர் பார்க்கிறாய் 

இனியும் இராதே ! தொலைந்து போ !

- அரவிந்த்


ரோஜாஇரவிவர்மன் செய்த 

ஓவியப் பிழைதானோ ?

உன்னோடு பிறந்த 

துளைக்கும் முட்கள் !
- அரவிந்த்