Friday, October 1, 2010

முற்றுபுள்ளி



எண்ணிய எழுத்துக்களை கவிதையாக

வரைந்தேன், கண்களுக்கு அது ஓவியமானது..

படித்தேன், காதுகளுக்கு அது இசையானது..

உணர்ந்தேன், எண்ணங்களுக்கு ஒரு உணருதல் கிடைத்தது..

பாடினேன், மெய் சிலிர்த்தது..

இவை அனைத்தையும் அவளிடமிருந்து கண்ட நான்..

உருகிப்போய் எனது எழுத்துகளின் ஓரத்தில் நின்றேன் 

முற்றுபுள்ளியாய் !
- அரவிந்த் நாராயணன்


Friday, July 30, 2010

கரைச்சல்


காகம் கரைகையில்
கரைந்து போய்
வாசலைப் பார்த்தேன் 
என் கண்கள் 
தான் கரைந்தன 
கதவுகள் கரையவில்லை !

- அரவிந்த் நாராயணன்


Wednesday, June 9, 2010

தமிழ்ப்பால்



தாய்க்கு பிறந்தவர்கள் 
தாய்மொழியில் பேசினால் 
நகைக்கிறார்கள் . . .

அன்று சின்னஞ்சிறு வயதில்
குடித்தாயடா உனது தமிழ்ப்பாலை 
இன்று அது உனக்கு புறை யேரிக்கூட
போகவில்லையா ?
- அரவிந்த் நாராயணன்