Friday, March 26, 2010

பின்னூட்டம் - 1 ( காதலுக்காக)

காதலுக்காக - இந்த கடிதத்தை எனக்கு எழுத அந்த நண்பரை தூண்டிய எனது எழுத்துக்கள்.

 யாரோ ஒரு நண்பர் என் மனசாட்சிக்கு குரல் கொடுத்திருக்கிறார் ! உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை என்று நான் கூறிய போதிலும், ஓரிரு விமர்சனங்களைத் தவிர எனது எழுத்துக்களுக்கு அவ்வளவாக விமர்சனங்கள் வந்ததில்லை . ஆனால் முதல் முறை இந்த பெயர் குறிப்பிட விருப்பமில்லாத நண்பர் அவர் மனதிலிருந்து அவருடைய மனசாட்சி அவருடன் எனது எழுத்துக்களைப் பற்றி பேசியதை, எனக்கு எனது மனசாட்சி என்று குறியிட்டு அனுப்பிவைத்துள்ளார் ...
அவரது கருத்தை நான் மதிக்கிறேன், உண்மையிலேயே மிக தீவிரமான தமிழ்ப்பற்று கொண்டவர் போல் தெரிகிறது. எனது எழுத்துக்கள் அவரை எந்த அளவு தாக்கி இருக்கிறது என்பது அவரது கோவமான கடுமையான சொற்களிலேயே தெளிவாக புலப்படுகிறது. 

சரி, அவரது கேள்விகளுக்கு சில பதில்கள் அளித்துவிட்டு மேலும் பார்ப்போம்.

Dai,
Naan than un manasaatchi pesaren. Un manasula enna than nenachitu irukka?? goyyale kavithai elutharenu yen ippadi kaluthai mathiri kanachittu irukka.. ithuku 4 velaiyattha loosu pasanga vera support!!

என் மனசாட்சி இதுவரை என்னிடம் இப்படி எதுவுமே கூறியதில்லையே. வேண்டுமெனில் இது உங்களது மனசாட்சி உங்களிடம் பேசியது என்று எடுத்துக்கொள்வோமாக! அதுவே சரி என்றும் தோன்றுகிறது. ஏனெனில் எனது மனசாட்சி இப்படித்தான் நினைக்கிறது என்றால் நான் இந்த இடுகைப்பதிவை தொடங்கியே இருந்து இருக்கமாட்டேன்.
எனது "பின் குறிப்பு" தாங்கள் சரியாக படிக்கவில்லை போலும். கொஞ்சம் இந்த பக்கத்தை முழுவதுமாக கீழே இழுத்து படித்து பார்க்கவும். எனது எழுத்துக்கள் அனைத்தும் கவிதையே அன்றி கவிதையைத் தவிர வேறொன்றும் இல்லை என்று நான் எங்குமே பிரகடனம் செய்யவில்லையே. மேலும் எனது எழுத்துக்கள் கவிதை நடையில் இல்லாமலும் இருக்கக்கூடும் என்று தெளிவாகத்தானே சொல்லி இருக்கிறேன். 
இந்த எழுத்துக்கள் அனைத்தும், இன்று இப்பொழுது நன்கு பக்குவப்பட்ட வயதில் நான் எழுதியவை அல்ல. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எட்டாம் வகுப்பு படித்த காலங்களில் எழுதியவை. அன்று  நான் ஒரு தமிழ் மேதையல்ல ஒரு சராசரி மாணவன் தான்.. இவனிடமிருந்து கண்ணதாசனோ அல்லது வைரமுத்து வரிகளையா எதிர்பார்க்க முடியும் ? 

கவிதைகளை கவிதைகளாகவே எழுதவேண்டும் என்றும் அதற்க்கு ஒரு தமிழறிஞ்சராகத்தான் இருக்கவேண்டும் என்றும், மேலும் அதற்க்கு தமிழில் முதுகலைப்பட்டம் வரையாவது படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால். ஒத்துக்கொள்கிறேன் எனது எழுத்துக்கள் கழுதையின் கினைப்பே. 
இருந்துவிட்டு போகட்டும், நான் கழுதை எனது எழுத்துக்கள் அவற்றின் கிணைப்பு என்றால் அவை தமிழில்தான் கெனைக்கிறது என்பதில் ஒரு சந்தோசம், ஆத்மதிருப்தி!!

எனது எழுத்துக்கள் தானே உங்களுக்கு பிடிக்கவில்லை, என்னை ஆதரித்தால் என்னால் முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்தோ அல்ல உண்மையிலேயே அவர்களுக்கு எனது எழுத்துக்கள் பிடித்து போயோ இருக்கும் பட்சத்தில் அந்த நண்பர்கள் மீது உங்களுக்கு ஏன் கோவம் ? அவர்களை எதற்கு ஏளனப்படுத்தவேண்டும் ? இது சரியா ?
உங்களுக்கு உண்மையிலேயே எனது எழுத்துக்கள் தான் பிடிக்கவில்லையா ? 
இல்லை நானா ?

Onnu olunga kavithai elutha try pannu.. ille nalla kavithai eluthi palagara varaikkum publish pannatha.. sathiyama solren ennalaye thaanga mudiyala..

சரி அய்யா, இதற்க்கு பிறகு புதிதாக எழுதும்போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். ஆனால் முன்பே எழுதி வைத்திருப்பதை, நண்பர்களிடமும், மற்றோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதால் தானே இடுகைகளாக பதிவுசெய்கிறேன். அந்த எழுத்துக்களை மாற்றி தான் பிரசுரிக்க வேண்டும் என்றால், அதன் உண்மைத்தன்மை சிதைந்து விடாதா? 
சத்தியமாக உங்களால் தாங்க முடியவில்லை என்றால் தமிழ்மணம்.நெட் தளத்திற்கு சென்று பிற நல்ல அருமையான "கவிதைகளை" வாசிக்கலாமே !

ethachum olaruna thaan athukku peru kavithai nu onakku evan da solli koduthaan?? mothala avana kaatra.. avana thookkuren da..

உளறினால் தான் அது கவிதை என்று யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. உலருவதற்கு எவரும் சொல்லிக்கொடுக்க தேவையும் இல்லை !
எனது உளறல்கள் தான் கவிதைகள் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை என்று மேலே நான் கூறிவிட்டேன். 
இருப்பினும் இந்த உளறல்களும், கிறுக்கல்களும் எனக்கு  முகம் தெரிந்த மற்றும் தெரியாத சில நண்பர்களுக்கு பிடித்து இருக்கிறதே, அவர்களுக்காக எழுதியதை பிரசுரிக்கிறேன். மேலும் எங்கோ இருக்கும் என்னவளுக்கு இந்த உளறல்கள் கவிதைகளாகக்கூட விளங்கலாமே ! அவளுக்காக எழுதினேன், பிரசுரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். 

itha padichapuramaachu thirunthu da.. illa naane unna vittu veliya vanthu unna kolai panniruven.. jaakirathai..

ஆம், நான் பயந்து விட்டேன் என்று சொல்லிவிடலாமா ?
எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களே, உங்களுக்கு என் எழுத்துக்கள் மீது அவ்வளவு பிடிப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த விமர்சன கடிதத்தின் தன்மைக்கு நான் எழுதிய பதில்கள் சரியென்று தாங்கள் கருதுகிறீர்களா ?

அந்த பக்குவப்படாத சிறு மாணவனின் எழுத்துக்களை அல்லது உளறல்களை அவனது டைரியிலேயே புதைத்து விடலாமா ???
- அரவிந்த் நாராயணன்


Thursday, March 25, 2010

காதலுக்காக


என் காதலுக்கு ஒரு
பெண்மையை தேடினேன் 
அந்த தென்றல் தரகன் கொடுத்த 
முகவரியில் தான் தெரிந்தது 
என் மனதை மையம் 
கொண்டு இருக்கும் 
அந்த புயல் நீ தான் என்று !
- அரவிந்த் நாராயணன்


Saturday, March 20, 2010

வாழ்க்கை


வாழ்க்கை -                                                             
வாழத் தெரிந்தவனுக்கு 
அது ஒரு கவிதை 
நான் கவிஞனாக 
இருக்க விரும்புகிறேன் 
உன்னை கவிதையாக 
எழுதுவதற்கு 
காதலெனும் எழுதுகோலைத் 
தருகிறாயா ?
- அரவிந்த் நாராயணன்


Thursday, March 18, 2010

தண்டவாளம்


உன்னை என்னிடம் 

இணைப்பதற்கு 

அதிவிரைவில் இறுதி வரை 

ஓடி வந்த பிறகும் 

இணையாமலே பிரிந்து நிற்கும் 

இரு கோடுகள் !
- அரவிந்த் நாராயணன்


Tuesday, March 16, 2010

முதல் முத்தம்


எதையும் முதலில் சகித்துக் கொள்ள 
முடியாத மனித இனம் - முதலில் 
அனுபவிக்கத் துடிப்பது 
இந்த ஒரு உன்னத உணர்ச்சிக்குத்தான் !

கருவறையை பிரிய மனமின்றி 
சிணுங்கும் அந்த ஆண்மை 
சாக்கடைச் சுவாசங்களை உள்ளிழுக்க - மறுத்து 
கதறும் அவனது மனம்
முதன் முதலில் சலவை செய்து கொள்ள 
ஏங்குவது - அவளது முதல் முத்தத்திற்கே 

இவை வெறும் உணர்ச்சிகள் அல்ல 
சுவாசங்களின் பரிமாற்றம் !
- அரவிந்த் நாராயணன்


Monday, March 15, 2010

தூறல் நேரங்களில் . . .


ஒரு மழை வாசத்தில் 
சற்றே உதிக்கும் அந்த வானவில் கூட 
ஏழு நிறங்களில் ஒன்றாய்த் தானடா 
வளைந்து செல்கிறது !

தவத்தின் புண்ணியத்தில் 
மனிதப் பிறவி கொண்ட 
உனக்கு மட்டும் ஏன் 
இத்தனை நிறங்களில் ஜாதிகள் ?
- அரவிந்த் நாராயணன்


Saturday, March 13, 2010

கனவோடு நிஜமாக


ஏனோ தெரியவில்லை 
உன் நினைவுகள் மட்டுமே 
என் இரவுகளில் சங்கமிக்கின்றன !

அதில் நாம் சந்தித்திருந்த 
பசுமையான பாலைகளும் 
நம்மோடு உறவாடிய 
சுகமான தென்றல்களும்
நிழலிலிருந்து நிஜமேடுத்து 
வியாபிக்கின்றன !

சட்டென எழுந்தேன் 
பல மின்னல்கள் பாய்ந்த உணர்ச்சி !

அப்பொழுது தான் புரிந்தது 
என் கனவில் நீ 
புன்னகைத்தது !
- அரவிந்த் நாராயணன்


Wednesday, March 10, 2010

நகம்


செத்துப்போன செல்களை 

அழகென்று வளர்க்கிறாய் 

உனக்காக வாழும் என்னை 

அசிங்கம் என கொன்றுவிட்டு ~!


- அரவிந்த் நாராயணன்


இப்படிக்கு


இந்த நூறாவது கடிதத்தை 

என் கண்ணீரில் நனைத்து 

கொடுக்கிறேன் என் அன்பே ! ஏனெனில் 

கிழிக்கும் போது கூட 

உன் விரல்கள் வலித்து விடக்கூடாது !!!

- அரவிந்த் நாராயணன்


Monday, March 8, 2010

வைகறைத் தூறல்


மதியின் பிரிவிற்காக 

கண்ணீர் விடக் காத்திருக்கும் 

வான் நதியைக் கண்டு 

வாடுகிறது இந்த பூமித்தாமரை ~! ! !~


- அரவிந்த் நாராயணன்


எதிர்ப்பார்ப்பு : நான் எழுதியதில் என்னைக்கவர்ந்த வரிகள் இவை. உங்களது கருத்துக்களுடன் சிறு உரையாட ஆசை. விமர்சியுங்களேன் ! உங்களது விமர்சனங்களே என் பேனாவின் மை !


Sunday, March 7, 2010

குறி


 என் வானவில்லே !

உன்னை என் மனதில் வட்டமிட்டேன் 

ஆனால், நீயோ அதை 

அம்பெய்த குறிபார்த்துவிட்டாயே !


- அரவிந்த் நாராயணன்


Saturday, March 6, 2010

அழுகை

 

அலைகள் மோதுகின்றன என்பதற்காக 

பாறைகள் அழவில்லை 

ஜன்னல்கள் தடுக்கின்றன என்பதற்காக

தென்றலும் அழவில்லை 

முகில்கள் மறைக்கின்றன என்பதற்காக 

ஆதவனும் அழவில்லை 

நண்பா ! பிறகு அவள் என்ன கூறிவிட்டால் 

என்று நீ மட்டும் அழுது கொண்டே இருக்கிறாய் ?

- அரவிந்த் நாராயணன் 


Friday, March 5, 2010

விடுதலை

 

உன் வீட்டு அஞ்சல் பெட்டியில் 

என் கடிதங்கள் 

மூர்ச்சையடைத்து கிடக்கின்றன 

சீக்கிரம் அதற்காவது 

விடுதலை கொடு !

- அரவிந்த் நாராயணன்