ஏனோ தெரியவில்லை
உன் நினைவுகள் மட்டுமே
என் இரவுகளில் சங்கமிக்கின்றன !
அதில் நாம் சந்தித்திருந்த
பசுமையான பாலைகளும்
நம்மோடு உறவாடிய
சுகமான தென்றல்களும்
நிழலிலிருந்து நிஜமேடுத்து
வியாபிக்கின்றன !
சட்டென எழுந்தேன்
பல மின்னல்கள் பாய்ந்த உணர்ச்சி !
அப்பொழுது தான் புரிந்தது
என் கனவில் நீ
புன்னகைத்தது !
- அரவிந்த் நாராயணன்
0 விமர்சனங்கள்:
Post a Comment
உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !
உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?
பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்